என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இரட்டை ஆயுள் தண்டனை
நீங்கள் தேடியது "இரட்டை ஆயுள் தண்டனை"
பள்ளி பாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் சத்தியநகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ஆனந்த் (வயது 28). இவர் நூற்பாலைக்கும், கட்டுமான தொழிலுக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனந்த், கடந்த 2016-ம் தனது வீட்டிற்கு அருகில் வசித்த 4 மற்றும் 5-வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசிலா வாதாடினார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்த ஆனந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 18 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆனந்தை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
×

X